
“தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், அரசியல் ரீதியாக முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று காலை 9 மணிக்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கட்சியின் முதல் செயற்குழுக் கூட்டம் நடைபெறும். செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளார். செயற்குழுவில் பல முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் தம்பி விஜய் வெற்றி பெற வேண்டும். ஆனால் எம்ஜிஆர் செய்ததில் 15% அல்லது 20% இறங்கி வந்து தொண்டு செய்யுங்கள். மக்களோடு பழகுங்கள். மேடையில் இருந்துக் கொண்டு புஸ்ஸி ஆனந்தை வைத்து அறிக்கை விட சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். யாரையும் நம்பாதீர்கள், நேரடியாக வர வேண்டும் என தயாரிப்பாளர் கே.ராஜன் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளார்.