தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை ஹன்சிகா. இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமாகி இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார் .மாப்பிள்ளை படத்தில் தான் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து விஜய், ஜெயம்ரவி என பல முன்னணி ஹீரோக்களோடு நடித்திருக்கிறார். எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாரா. அந்த வகையில் தற்போது ட்ரெண்டிங் பாடல் ஒன்றுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார் . சேலை யில் ஹன்சிகா ஆடிய வீடியோவானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.