
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இன்று புதிதாக கட்சி தொடங்குபவன் எல்லாம் திமுக அழிய வேண்டும் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. திமுக செய்த 4 வருஷ சாதனைகளை ஒரு கணம் அவர்கள் நினைத்துப் பார்க்கட்டும் என்று கூறினார். இதற்கு தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் வீர விக்னேஸ்வரன் முதல்வர் ஸ்டாலின் தங்கள் தலைவர் விஜயை தரக்குறைவாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தொடர்பாக பிரபல ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தங்கள் தலைவர் விஜயை தரக்குறைவாக விமர்சித்துள்ளார். எதிரிகளை தரகுறைவாக பேசுவது திமுக டிஎன்ஏவிலேயே உள்ளது. வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் இந்த குடும்ப ஆட்சியை துடைத்தெறியப்படும் என்றார். இதேபோன்று தமிழக வெற்றி கழகத்தின் x பக்கத்திலும் ஸ்டாலின் வரவன் போறவன் எல்லாம் திமுகவை அழிக்க பார்க்கிறார்கள் என்று விமர்சனம் செய்ததாகவும். சீமான் லாரியில் அடிபட்டு செத்துருவ என்று விமர்சித்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளனர். மேலும் யாரையும் தரம் தாழ்ந்து விமர்சிக்க வேண்டாம். ஆதாரங்களுடன் பதிவிடவும் என்று பதிவிட்டுள்ளனர்.
ஸ்டாலின்:- வரவன் போறவன்லாம் திமுகவை ஒழிக்கவே பார்கிறார்கள்
சீமான் : லாரியில் அடி பட்டு செத்துருவ.
தலைவர் விஜய் : யாரையும் தரம் தாழ்ந்து விமர்சிக்க வேண்டாம். சமூக வலைதளங்களில் ஆதாரங்களுடன் பதிவிடவும் 🙏💛❤️ pic.twitter.com/eRM3NF724d
— TVK Vijay Trends (@TVKVijayTrends) November 4, 2024