கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் கிச்சாசுதீப். இவர் தமிழ் சினிமாவில் புலி மற்றும் நான் ஈ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது மேக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 25ஆம் தேதி பான்‌ இந்தியா வெளியாகி உள்ளது. இந்நிலையில் முன்னதாக இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகர் கிச்சா சுதீப் விஜய் பற்றி புகழ்ந்து பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

இது பற்றி அவர் பேசியதாவது, விஜய் சார் மிகப்பெரிய கனவு காண்பவர். அவர் அதிக கவனத்துடன் இருப்பவர். அவரைப் போன்று யாருக்கும் தெளிவு கிடையாது. அவருக்கு என்ன செய்ய வேண்டும் எப்போது செய்ய வேண்டும் என்பது பற்றி நன்றாக தெரியும். மேலும் அதை அவர் மிகவும் துல்லியமாக செய்வார் என்று கூறினார்.