காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை விஜயை இந்தியா கூட்டணிக்கு அழைத்த நிலையில் இதனை தற்போது பாஜகவினர் விமர்சித்து வருகிறார்கள். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை சமீபத்தில் திராவிட கட்சி தலைவர் ஒருவர் கூட்டணிக்கு அழைத்த நிலையில் தற்போது இந்தியா கூட்டணியில் சேர்வதற்கு செல்வபெருந்தை அழைத்துள்ளார். அவர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை தயவுசெய்து ராகுல் காந்தி மீது வையுங்கள் என்று கூறுவது தான் என்னுடைய ஒரே ஒரு அறிவுரை.

திருவள்ளுவர் திமுக பிறக்கும் முன்பே திருக்குறளில் ஆன்மீக கருத்துகளை கூறியுள்ளார். அதனை ஆரிய கைக்கூலியாக வள்ளுவர் இருந்து கொண்டு இந்த கருத்துகளை திணித்துள்ளார் என்று திருவள்ளுவர் திணித்துள்ளார் என்று பெரியார் கடுமையாக சாடியுள்ளார். அவருடைய வழியில் வந்த திமுகவினருக்கு வள்ளுவர் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது. திருப்பரங்குன்றம் மலை மீது நடக்கும் பிரச்சனைக்கு திமுக அரசு பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆடுவது கடுமையான கண்டனத்திற்கு உரியது. மேலும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் கண்டிப்பாக திமுக ஆட்சி வரும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும் என்று கூறினார்.