
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் கடந்த வருடம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து இதுவரை பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. இது பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஷாலும் விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் கூறியதாவது, மொழி திணிப்பு என்பதை ஒரு சட்டமாகவே கொண்டு வரலாம். ஆனால் அதனை ஒரு மனிதனின் வாழ்க்கையில் கொண்டுவர முடியாது. மனிதனின் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் திணிக்க முடியாது. அது மத்திய அரசாக இருந்தாலும் சரி மாநில அரசாக இருந்தாலும் சரி. நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும். அதற்குப் பிறகு அவரிடம் நீங்கள் கேள்வி கேளுங்கள். உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும் என்றார். மேலும் சமூக சேவை செய்யும் எண்ணம் இருக்கும் அனைவருமே அரசியலுக்கு வரலாம் என்று கூறினார்.