
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியல் கட்சி தொடங்கி இருப்பவர் தளபதி விஜய். இவர் கடைசியாக நடிக்கும் ஜனநாயகன் படத்திற்கு பிறகு முழு நேரமாக அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷா குப்தா விஜய் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசுவையில் “தளபதி பற்றி சொல்லவே தேவையில்லை. அவர் சும்மா நின்னாலே ஒரு பெரிய கூட்டமே வரும் அந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவர் அடுத்த CM ஆக வருவார் என்று நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். அப்போது அவரிடம் விஜய் அவர்கள் கட்சியில் பதவி கொடுத்தால் போவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு “அவர் கூப்பிட்டால் கண்டிப்பாக நான் போய் விடுவேன்” என கூறியுள்ளார்.