தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பாக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார்.

தமிழக முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வரும் பிரேமலதா நேற்று தனது மகனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது, விஜய பிரபாகரன் தனது மகன் இல்லை, நீ உங்கள் மகன் என்றும் இன்னும் அவருக்கு திருமணம் கூட ஆகவில்லை. உங்களுக்காக உழைக்க வந்துள்ளார் என்றும் உருக்கமாக பேசி வாக்கு சேகரித்தார்.