டாடா ஸ்டீல் செஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரின் நான்காவது சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பேக் யாகுபோவ் தமிழகத்தை சேர்ந்த வைஷாலியுடன் மோதினார்.

பொதுவாக செஸ் விளையாட்டின் தொடக்கத்திலும் முடிவிலும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கொள்வது வழக்கம். ஆனால் நோடிர்பேக் வைஷாலி கைகுலுக்க முயன்ற போது அதனை தவிர்த்துவிட்டு விளையாட ஆரம்பித்துவிட்டார்.

இது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் X வலைதள பக்கத்தில் மத ரீதியான காரணங்களால் கைகுலுக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனாலும் முந்தைய தொடர்களில் அவர் வீராங்கனைகளுடன் கைக்கூலுக்க இதை சுட்டிக்காட்டி பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வைஷாலியை நேரில் சந்தித்த நோடிர்பேக் அவருக்கு பூங்கொத்தும் சாக்லேட்டுகளையும் கொடுத்து மன்னிப்பு கேட்டுள்ளார்.