
கோவை அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த 65 வயது மூதாட்டியை 3 வடமாநில தொழிலாளர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த போது, மூதாட்டி சமையல் செய்து கொண்டிருந்த நிலையில் அந்த மூவரும் நைசாக வீட்டுக்குள் புகுந்து திடீரென தாக்கினர். பின்னர் 3 பேரும் மூதாட்டியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வந்த போது, குற்றவாளிகள் தப்பிச் செல்ல முயன்றனர். உடனடியாக பொதுமக்கள் இருவரை விரட்டி பிடித்தனர். இன்னொருவர் தப்பியோடினார். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் விரைந்து வந்து பிடிபட்ட இருவரையும் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நபரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.