
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பெண்களுக்கான ஒரு தங்கும் விடுதி அமைந்துள்ளது. இங்கு கிருதி குமாரி (24) என்பவர் தங்குயிருந்தார். இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தங்கி இருந்த விடுதிக்கு கடந்த 23ஆம் தேதி இரவில் வாலிபர் ஒருவர் வந்தார். அந்த வாலிபர் கிருதிகுமாரி அறை கதவை தட்டிய நிலையில் அவர் வெளியே வந்தார். அப்போது அந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரிடமிருந்து தப்பிக்க கிருதி குமாரி போராடிய நிலையில் அவரால் மீள முடியவில்லை. இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அபிஷேக் என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது. இவர் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 23ஆம் தேதி அந்த விடுதிக்கு சென்று காவலாளியுடன் சண்டை போட்டது தெரியவந்த நிலையில் அவர் அங்கு தங்கி இருந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட இளம் பெண்ணை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது அபிஷேக் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் அந்த நிறுவனத்தில் இளம் பெண்ணும் வேலை செய்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் ஒரு விடுதியில் கணவன் மனைவி போல் தங்கியிருந்தனர். இதற்கிடையில் அபிஷேக் வேலையை விட்டு நின்றதால் இளம் பெண்ணுக்கும் அவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவரைப் பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு கிருதி குமாரி தங்கியிருந்த விடுதிக்கு இளம்பெண் சென்ற நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது காதலை கைவிடுமாறு கிருதிகுமாரி இளம் பெண்ணிடம் கூறியுள்ளார். இந்நிலையில் தன் காதலியும் கிருதி குமாரியும் ஒரே அறையில் தங்கி இருந்த நிலையில் காவலாளி வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து விடுதிக்குள் நுழைந்த வாலிபர் அவர்கள் தங்கி இருந்த அறை கதவை தட்டினார்.
அப்போது அவருடைய காதலி வெளியே சென்ற நிலையில் கிருதி குமாரி கதவை திறந்தார். அவரை தன் காதலி என நினைத்து தவறுதலாக கொலை செய்து விட்டு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் அவர் வேண்டுமென்றே கொலை செய்தாரா? இல்லையெனில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.