நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மத்திய அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் அன்றைய தினம் ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது என்றும் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறும் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏப்ரல் நான்காம் தேதி அவசர சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும் எனவும் அறிவித்துள்ளது.