காசாவில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலின் அதிர்ச்சி தரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதாவது ஒரு வீடியோவில், வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தில் இருந்து பல உடல்கள் விண்ணில் பறந்து மீண்டும் தரையில் வீழ்வதை காண முடிகிறது. அந்தக் கணத்தில் ஒரு பெண் ஆழ்ந்த துயரத்தில் கதறுவதை கேட்டுவிடலாம். இந்தக் காணொளி உலகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “இவை பறக்கும் பறவைகள் அல்ல, காசாவின் வானில் பறக்கும் பெண்கள், குழந்தைகளின் உடல்களே,” என்று சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரே ஒரு செய்தி இந்த போரின் கொடூர தன்மையை வெளிச்சமிடுகிறது.

 

கடந்த 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் மேற்கொண்ட திடீர் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராக போருக்கு சென்றது. அதையடுத்து ஆயிரக்கணக்கான விமான தாக்குதல்களும் நிலப்போரும் நடைபெற்றன. காசா சுகாதார துறையின் தகவலின்படி, அக்டோபரிலிருந்து இதுவரை 50,000-க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது வேதனையளிக்கிறது. கலை விழாக்கள் மற்றும் வீடுகளும் சுட்டுத் தள்ளப்பட்டு நூற்றுக்கணக்கான குடிமக்கள் கொல்லப்பட்டனர். மனிதாபிமான பேரழிவாக மாறியுள்ள இந்த நிலைமையில், உலக நாடுகள் இதனை கண்டித்து நடவடிக்கை எடுப்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.