அமைச்சரவை கூட்டத்திற்குப்பின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது, விண்வெளிக் கொள்கை 2025க்கு ஒப்புதல்” அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விண்வெளி கொள்கை 2025-க்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி முதலீடு ஈர்ப்பது முக்கிய இலக்கு. இதன் மூலம் 10,000 பேருக்கு வேலை கிடைக்கும். குலசேகரப்பட்டினம் போன்ற தென் தமிழ்நாட்டு பகுதிகளுக்கு இது வரப்பிரசாதம் என கூறியுள்ளார்.