சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து  ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் பத்திரமாக பூமிக்கு திரும்புவோம் என்று இந்திய விண்வெளி வீரர்  சுனிதா வில்லியம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலம் எங்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும் என்று மனதளவில் நான் முழுமையாக நம்புகிறேன்.

அதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. தோல்வி என்பது ஆப்ஷன் கிடையாது. அதனால், தான் நாங்கள் இப்போது இங்கேயே தங்கி  இருக்கிறோம். நாங்கள் பூமி திரும்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.