
ஜப்பானை சேர்ந்தவர் ரியோடா. இவர் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அனுமதி இல்லாமல் நுழைந்து டிவி பார்த்து கொண்டு இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரியோடாவை கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
அதாவது பத்துக்கும் மேற்பட்ட முறை அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி ரியோடா நுழைந்துள்ளார். இதற்காக போலி சாவிகளை தயாரித்து வைத்துள்ளார். அந்த பெண்ணின் வீடு சுத்தமாகவும் அழகாகவும் இருப்பதால் அடிக்கடி வந்து சென்றதாக ரியோடா கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் வேலை பார்க்கும் பெண்களின் வீட்டிற்குள் ரியோடா அடிக்கடி அத்துமீறி நுழைந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.