கர்நாடகா மாநிலம் ஜாம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரா. இவர் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இவரது உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து ஈஸ்வராவின் பெற்றோர் மற்றும் காவல் துறையினர் அனுமதியுடன் மருத்துவர் விக்ரம் செட்டி ஈஸ்வராவின் எலும்புகளை தானமாக கொடுக்க அறுவை சிகிச்சை செய்து எடுத்துள்ளார். எலும்புகளை எடுத்து விட்டு அதற்கு மாற்றாக பிளாஸ்டிக் வைத்து மருத்துவர் அறுவை சிகிச்சை முடித்துள்ளார்.

தானமாக பெறப்பட்ட இந்த எலும்புகளால் ஆறு குழந்தைகளுக்கு வாழ்க்கையும் நம்பிக்கையும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.