
சென்னை புது வண்ணாரப்பேட்டை பாரதி நகர் ஏ இ கோவில் தெருவில் கூலித்தொழிலாளியான வெங்கடாசலபதி வசித்து வருகிறார். இவருடைய மகள் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில் திருவொற்றியூர் தியாகராயபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த அப்துல் சாஜித்(19) என்பவரை இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அப்துல் தனது பெற்றோர் புதிதாக வாங்கிக் கொடுத்த மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார். காதலன் உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் மாணவி நேற்று முன்தினம் நள்ளிரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் மகள் வெளியே வராததால் அறைக்குள் சென்று பார்த்தபோது மகள் பிணமாக தூங்குவதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.