
தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற வருபவர்கள் மது அருந்தி இருந்தால் ரத்த பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அனைத்து மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றுறிக்கையில், விபத்து வழக்குகளின் போது ரத்தத்தில் மதுவின் அளவை கண்டறிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
சாலை விபத்து சிகிச்சைக்கு ரத்த பரிசோதனை கட்டாயம் என்று அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விபத்து வழக்குகளில் இழப்பீடுகளை தீர்மானிக்க முடியாத நிலை இருப்பதாக ஐ-கோர்ட் கூறி இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.