
குஜராத்தில் உள்ள ஜாம்நகர் பகுதியில் ஜாகுவார் ரக விமானத்தில் இந்திய விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் தீப்பிடித்து எரந்தது.
இந்த விபத்து நடந்த உடன் ஒரு விமானி பத்திரமாக கீழே இறங்கிய நிலையில் மற்றொரு விமானியை காணவில்லை. அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த 1970 ஆம் ஆண்டு முதலில் இந்திய விமானப்படையில் இந்த ஜாகுவார் ரக சிறிய விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.