நடிகர் அஜித் சொந்தமாக கார் ரேஸ் வைத்துள்ளார். துபாயில் நடைபெற்ற ரேஸ் போட்டியில் அவருடைய அணியானது மூன்றாவது இடம் பிடித்தது. முன்னதாக அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது விபத்து ஒன்றில் சிக்கினார். அதில் காயம் இன்றி உயிர்த்தப்பினார். இந்த நிலையில் ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்து கொண்ட நிலையில் மீண்டும் அவருடைய கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டார்.

அப்போது முந்தி செல்ல முயன்ற மற்றொரு கார் குறுக்கே வந்து மோதியதால் விபத்து ஏற்பட்டது. கார் குறுக்கே வந்ததால் அஜித் கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் நல்வாய்ப்பாக அஜித்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இந்நிலையில் விபத்துக்குப் பிறகு அஜித் நிதானமாக செயல்பட்ட காட்சியை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார்.