மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் டோம்பிளி நகர் உள்ளது. இங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதன் மூன்றாவது தளத்தில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேவி என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மதியம் வேலை முடிந்த பிறகு தன்னுடைய சக ஊழியர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தேவி 3-வது மாடி சுவரின் மேல் அமர்ந்திருந்தார்.

அப்போது விளையாட்டுக்காக தேவியை சக ஊழியர் கட்டிப்பிடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக தேவி மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். அவரை சக ஊழியர் பிடிக்க முயன்ற நிலையில் அது பலனளிக்கவில்லை. இந்நிலையில் பலத்த காயங்களுடன் தேவியை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.