
நியூசிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமான என்ஜின் பகுதியில் தீப் பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் விமானத்தின் என்ஜின் செயலிழக்க ஆரம்பித்தது.
இதனால் அவசர அவசரமாக விமானம் தரை இறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது அதன் எஞ்சின் மீது பறவைகள் மோதியதால் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.