சமீப காலமாக நடக்கும் விமான விபத்துக்கள் மிகவும் அதிர்ச்சிகரமாக அமைந்துள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ள நிலையில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். அதாவது நேபாள நாட்டிலுள்ள ஜனக்பூர் விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை ஒரு விமானம் கிளம்பியது. இந்த விமானம் அங்கிருந்து கிளம்பிய போது திடீரென முன் சக்கரம் கழன்று விழுந்துள்ளது. ஆனால் இதனை விமான ஊழியர்களும் பயணிகளும் அறியவில்லை. முன் சக்கரம் கழன்று விழுந்தது விமானிகளின் கவனத்திற்கு செல்லாத நிலையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான அடையாளங்களும் வெளிப்படவில்லை. இதை தொடர்ந்து திரிபுவனம் சர்வதேச ஏர்போர்ட்டில் பாதுகாப்பாக திரையரங்கியது.

அதாவது 4.45 மணியளவில் அந்த விமானம் கிளம்பிய நிலையில் சுமார் 5.10 மணி அளவில் தரையிறங்கியது. அதன் பிறகு விமானத்தை வழக்கமான சோதனைக்கு உட்படுத்திய போது தான் முன் சக்கரம் இல்லாதது தெரிய வந்தது. உடனடியாக ஊழியர்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சக்கரத்தை தேடினார்கள். அப்போது விமானம் புறப்பட்ட ஏர்போர்ட்டில் அது கிடந்தது தெரியவந்தது. மேலும் அதிர்ஷ்டவசமாக 62 பயணிகளும் பாதுகாப்பாக தரையிறங்கிய நிலையில் இதனை அவர்கள் யாரும் அறியாதது தான் ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறுகிறது.