
விருதுநகர் மாவட்டம் பனையடிபட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் பனையடிப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (15.12.2023) காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், பனையடிப்பட்டி கிராமம் கண்டியாபுரத்தைச் சேர்ந்த திரு.சண்முகராஜ் (வயது 36) த.பெ. திரு. பொம்மு ரெட்டியார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் பனையடிபட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/BDNxVaZFip
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 15, 2023