சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு மருத்துவமனையில் மனநலம் பாதித்தவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகிறார். இவருக்கு சுபஸ்ரீ (20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வியின் தம்பி முத்துக்குமார் (27) அவருடைய வீட்டில் தங்கி ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் சிலரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதற்கிடையில் சுபஸ்ரீயும் முத்துக்குமாரும் காதலித்து வந்த நிலையில் வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்று மதியம் திடீரென முத்துக்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கேள்விப்பட்ட சுப ஸ்ரீயும் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.