
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் ரிலீசான குட் பேட் அக்லி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
நேற்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஜித்திற்கு பத்மபூஷன் விருதினை வழங்கினார். இந்த நிலையில் விருதினை பெற்று சென்னைக்கு திரும்பிய அஜித்திற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அஜித், அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பத்மபூஷன் விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சி என கூறினார். அதன் பிறகு செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்ற போது விரைவில் நேரில் சந்திப்போம் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.