
நகரங்களுக்கு இடையில் போக்குவரத்தை குறைப்பதற்காகவே சில மாற்றங்களை கொண்டு வர ரயில்வேத்துறையானது முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் முறையாக வந்தே மெட்ரோ ரயிலை அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது.
வந்தே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பாதை இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆந்திராவின் திருப்பதியில் இருந்து சென்னை நகரங்களுக்கு இடையே வந்தே மெட்ரோ சோதனை ஓட்டம் நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.