நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமான ஒருவர் .இவர் நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது. இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்தது. ஆனாலும் கூட ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள்.  முதல் பாகத்தின் வெற்றியையடுத்து இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை கடந்த வருடம் வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

ஆனால் இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவில்லை. சுந்தர் சி தான் இயக்குகிறார் என்று அறிவித்தனர். மேலும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் படத்தின் பூஜை வரும் ஆறாம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு இந்தாண்டே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் செட் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.