பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது போலிசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் நேற்று நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதனையடுத்து அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெறுவதற்கு வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, அரசு வழங்கிய விலையில்லா டி.வி., மின் விசிறியை உடைத்ததால் அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. தமிழக அரசின் மின்கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.