
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரம் ஆக அறிமுகமான அனிகா சுரேந்திரன் தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் அவருக்கு மகள் அனிகா நடித்துள்ளார். தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் அனிகா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.
இவர் சமீபத்தில் ஹிப்ஹாப் ஆதி தமிழா நடித்த பி.டி சார் படத்தின் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் நடிகை அனிகா மும்பைக்கு சென்றபோது தான் ஒரு செருப்பை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக கூறியுள்ளார். அதாவது 6 இன்ச் உயரமான ஒரு ஹீல்ஸ் செருப்பை அவர் பார்த்துள்ளார். அந்த செருப்பின் விலை ரூ.1 லட்சம். அந்த செருப்பின் மீது எனக்கு தீராத ஆசை இருக்கிறது. அந்த செருப்பை வாங்க வேண்டும் எனக்கு ஆசை இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இதைக் கேட்ட ரசிகர்கள் ஒரு செருப்பின் விலை ஒரு லட்சமா என்று கேட்டு வருகிறார்கள்.