
கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் நான் மாடலிங் தொழில் செய்து வரும் நிலையில் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறேன். அப்போது எனக்கு சித்தார்த் என்பவர் அறிமுகமானார். அவர் என்னிடம் விளம்பர படத்தில் நடிக்க வைப்பதற்கு இங்கிலாந்துக்கு அனுப்புவதாக கூறினார்.
அதோடு அவர் என்னை ஒரு ஹோட்டலுக்கு வருமாறு அழைத்தார். நான் ஆசையோடு அங்கு சென்ற நிலையில் அவர் முதலில் விளம்பர படத்தை பற்றி பேசினார். பிறகு திடீரென என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டதோடு என்னிடம் அத்துமீற முயற்சித்தார். நான் அவருடைய ஆசைக்கு இணங்காமல் அங்கிருந்து வந்துவிட்டேன். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து சித்தார்த்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.