மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் ஜித்து இவர் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது சகோதரியின் குழந்தை திடீரென காணாமல் போயுள்ளது. குழந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தனது சகோதரியுடன் சென்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினரின் விசாரணையில் ஜித்து தான் சிக்கி உள்ளார்.

சகோதரியின் 3 வயது குழந்தையுடன் ஜித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது விளையாட்டாக குழந்தையை அடித்துள்ளார். இதில் கீழே விழுந்த குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே குழந்தை இறந்துவிட்டது. இதனை தொடர்ந்து தான் குழந்தையின் சடலத்தை மறைக்க ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு எடுத்துச் சென்று எரித்துள்ளார்.

இதனை ஜித்து காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எதிர்பாராமல் நடந்த சம்பவமாக இருந்தாலும் தாய்மாமனால் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.