கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் நெய்யாற்றின் கரையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடைபெற்ற கலை திருவிழாவில் கல்வித்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர். அந்த விழாவில் கொடி ஏற்றப்பட்டது.பஆனால் கொடிக்கம்பத்தின் உச்சியில் கொடி சரியாக பறக்காமல் சிக்கியதால் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கொடி கம்பத்தில் ஏறி அதனை சரி செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு அமைச்சர் சிவன் குட்டி கல்வி இயக்குனருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையே அந்த மாணவன் பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தான் என்.எஸ்.எஸ்-சில் பயிற்சி பெற்றுள்ளதால் தாமாகவே கொடி கம்பத்தில் ஏறியதாகவும், தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் மாணவன் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.