
நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. இந்த பணம் 3 தவணைகளாக 2000 ரூபாயாக வழங்கப்படும் நிலையில் இதுவரை 17 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 18 வது தவணை தொகைக்காக விவசாயிகள் காத்திருந்த நிலையில் மத்திய அரசு அக்டோபர் 5-ம் தேதி 18 வது தவணைத்தொகை பணம் கிடைக்கும் என்று தெரிவித்தது.
இந்த பணம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் எனில் இகேஒய்சி சரிபார்ப்பை முடிப்பது அவசியம். இதனை முடிக்காத விவசாயிகளுக்கு தவணைத்தொகை தாமதமாகவோ அல்லது வராமல் போகவோ வாய்ப்பு உள்ளது. எனவே அந்த செயல்பாட்டினை அனைத்து விவசாயிகளும் முடிப்பது அவசியம். மேலும் 18 வது தவணைத் தொகை குறித்து அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.