கர்நாடகாவில் வறட்சியால் ஏற்பட்ட பயிர் சேதத்தால் 35,162.05 கோடி ரூபாய் இழப்பு என அரசு மதிப்பிட்ட நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.18,171.44 கோடியை மத்திய அரசிடம் மாநில அரசை கேட்டுள்ளது. அதற்கான ஒப்புதல் கிடைக்காத நிலையில் முதல்வர் தற்காலிக நிவாரணமாக பகுதி இழப்பீடு தொகையை அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசே விவசாயிகளின் வங்கி கணக்கில் பாதியளவு வறட்சி நிவாரணமாக 2000 ரூபாய் தொகையை அடுத்த வாரம் முதல் வரவு வைக்கும் என வருவாய் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் வறட்சியின் போது கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதை உறுதி செய்ய விவசாயிகளுக்கு ஏழு லட்சம் தீவன விதை பெட்டிகள் வழங்கப்பட உள்ளதாகவும் மினி தீவனப் பெட்டிகள் வழங்குவதற்காக கால்நடை பராமரிப்பு துறைக்கு செப்டம்பர் 22ஆம் தேதி 20 கோடியை அரசு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.