நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிலையில் 6000 ரூபாய் உதவித்தொகையை 8000 ரூபாயாக உயர்த்தியின் நான்கு தவணைகளில் செலுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு முன்பு இதை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.