
மத்திய அரசின் திட்டத்தின் மூலமாக விவசாயிகள் நிதி ரீதியாக பயன்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் பிரதான் மந்திரி குசும் யோஜனா திட்டம். இந்த திட்டமானது விவசாயிகளுடைய வருமானத்தை இரட்டிப்பாக்க மானிய உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து மானிய உதவி பெறலாம் . இருப்பினும் எவ்வளவு மானியம் கிடைக்கும் என்பது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகள் சோலார் பம்புகளை அமைத்து விவசாயம் செய்யலாம்.
இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், அதிக மின்சாரம் அல்லது எரிபொருள் காரணமாக விவசாயிகளுடைய செலவு அதிகரிக்கும் சிரமத்தை குறைப்பதே ஆகும். மின்சாரத்திற்காக விவசாயிகள் அதிகம் செலவிடுவதை குறைப்பதற்கு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மானிய உதவி பெற்று அதன் மூலம் சோலார் பம்புகளை அமைக்கலாம். இதன் மூலம் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு அதனோடு பாசனமும் வழங்கப்படும். இந்த திட்டத்தில் உதவி பெறுவதற்கு விவசாயிகளுக்கு 4 முதல் ஐந்து ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு 45 சதவீதம் மானிய உதவி வழங்கப்படுகிறது.