
இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். விவசாயிகள் முதிர்வு காலத்திலும் பயன்பெறும் விதமாக பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதன்படி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் வகையில் கிசான் கிரெடிட் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.
விவசாயிகள் ஏழு சதவீத வட்டியுடன் 3 லட்சம் ரூபாய் வரை உரிய காலத்தில் கடன் பெற முடியும். அதேசமயம் விவசாயிகள் இதற்கு எந்த ஒரு பத்திரப்பதிவும் செலுத்த தேவையில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் தொகையை செலுத்தினால் மூன்று சதவீதம் வட்டி சலுகையும் கிடைக்கும். இது பிரதம மந்திரி பார்சல் பீமா யோஜனா உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இணைந்து பயன்பெற உள்ளூர் வங்கிகளை விவசாயிகள் அணுகவும்.