
பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு பதினாறாவது தவணையானது பிப்ரவரி 28ஆம் தேதி விவசாயிகளுடைய வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதன் பதினைந்தாவது தவணையானது நவம்பர் 15, 2023 அன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு கேஒய்சி செயல்முறையை நிறைவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது.
எனவே விவசாயிகள் கேஒய்சி செயல்முறையை அருகிலுள்ள இ சேவை மையத்திற்கு சென்று முடித்துக் கொள்ளலாம். மேலும் இந்த திட்டம் ஹெல்ப்லைனில் இருந்து 15526 என்ற எண்ணில் உதவி பெறலாம் அல்லது 011-243 060 என்ற எண்ணிற்கு டயல் செய்யலாம் என்று அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.