
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது.
தற்போது வரை பனிரெண்டாவது தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை பணம் வங்கி கணக்கில் வர இருக்கிறது. இந்த தவணை ஆனது ஹோலி பண்டிகைக்கு முன்னதாக விவசாயிகள் உடைய வங்கி கணக்கில் அரசு செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பி எம் கிசான் திட்டத்தில் பயன் அடையும் விவசாயிகள் தங்களுடைய வங்கி கணக்குகளின் இ-கேஒய்சி சரிபார்ப்பை இன்றைக்கும் (பிப்ரவரி 10ஆம் தேதி) முடிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் ரூபாய் 2000 பணம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுள்ளது. எனவே விவசாயிகள் வரவிருக்கும் தவணைப் பண பரிமாற்றத்திற்காக இ கேஒய்சி அப்டேட்டில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இன்றைக்கும் (பிப்ரவரி 10ஆம் தேதி) இந்த வேலையை முடிக்காவிட்டால் பணத்திற்கு ஆபத்து என்று எச்சரிக்கப்பட்டுள்ளது