
இந்தியாவில் நான்கு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதன்படி டிகோஃபோல், டைனோகேப், மெத்தோமைல் மற்றும் மோனோகுரோட்டோபாஸ் ஆகிய மருந்துகளை பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதல் மூன்று மருந்துகளின் பதிவு சான்றிதழ், விற்பனை மற்றும் விநியோகம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோனோ க்ரோட்டோபாஸ் மருந்து தயாரிப்பதற்கு புதிய பதிவு சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தடை செய்யப்பட்ட இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.