
தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றானது அண்ணா பல்கலைக்கழகம். இதன் கீழாக மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் உறுப்பு கல்லூரிகளாக செயல்பட்டு வருகிறது. உயர் கல்வி சேவை மட்டுமல்லாமல் சமூக நலன் சார்ந்த பல்வேறு விஷயங்களையும் அண்ணா பல்கலைக்கழகம் முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 400 விவசாயிகளுக்கு ட்ரோன்கள் இயக்கும் பயிற்சி அளிக்க உள்ளது.
இதற்கான பயிற்சி குரோம்பேட்டை MIT யில் உள்ள ஏரோஸ்பேஸ் ஆராய்ச்சி ரிமோட் பைலட் பயிற்சி மையத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . 52 மணி நேரம் பயிற்சிக்கு பின் வயல்களில் சோதனை முயற்சியில் விவசாயிகள் ஈடுபடுத்தப்படுவார்கள். ட்ரான்களின் பயன்பாடு விவசாயத்துறையில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மருந்து தெளித்தல், உரம் போடவும் பயன்படுத்தலாம். 18 வயது முதல் 65 வயதுடையவர்கள் இந்த பயிற்சியை பெற முடியும். இந்த பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.