பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ராணாவத். இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் நடிகை கங்கனா ரானாவத் நேற்று டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு பெண் சிஐஎஸ்எஃப் வீரர் நடிகை கங்கனாவை கன்னத்தில் பளார் என அறைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த நிலையில் ரங்கனாவை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் குல்வீந்தர் கவுர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குல்வீந்தர் கவுர் நடிகை கங்கனாவை அறிந்ததற்கான காரணம் குறித்து பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரூ.100 அல்லது ரூ‌.200 வாங்கிக் கொண்டு டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக கங்கனா கூறியுள்ளார். டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளில் என்னுடைய அம்மாவும் ஒருவர். அதனால்தான் அவர் சொன்னதை கேட்டு கோபத்தில் கன்னத்தில் அறைந்தேன் என்று பெண் காவலர் கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பெண் காவலருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்..