ஈரோடு மாவட்டம் சூரியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(45). இவரது மனைவி ரேவதி(38). இந்த தம்பதியினருக்கு சுதிக்ஷன்(13), கபிலேஷ்(11) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரேவதி தனது மகன்களுடன் மல்லன்குழி கிராமத்தில் இருக்கும் தனது தாய் முத்துசாமியின் வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையே விவாகரத்து கேட்டு ரேவதி தனது கணவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது.

இதனால் தங்கவேல் தனது மாமனார் வீட்டிற்கு சென்று 2 மகன்களையும் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு ரேவதியிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ரேவதி அருகே கடந்த கல்லை எடுத்து தங்கவேலின் தலை மீது போட்டார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே தங்கவேல் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கவேலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரேவதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.