பிரபல நடிகரான தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2022-ஆம் ஆண்டு விவாகரத்து செய்ய போவதாக தனுஷும் ஐஸ்வர்யாவும் அறிவித்தனர். இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. நேற்று தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் தம்பதியினர் பிரிந்ததால் யாத்ராவும் லிங்காவும் யாரிடம் வளர்வார்கள் என சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக எப்படி கோ- பேரண்டிங் முறையில் இருவரும் வளர்ந்தார்களோ அப்படி தான் இனியும் தனுஷும், ஐஸ்வர்யாவும் யாத்ரா லிங்காவை, வளர்ப்பார்கள் என கூறப்படுகிறது.