திருவனந்தபுரம் வட்டியூர்கா என்ற பகுதி பகுதியில் முன்னாள் கணவர் தனது நிர்வாண படத்தை எடுத்து பரப்பியதால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னதாக விவகாரத்தை பெற்ற அந்த பெண் வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார் .முன்னாள் கணவருடைய சித்திரவிதையின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த அறையில் ஒரு கடிதம் சிக்கியுள்ளது.

அதில் நிர்வாண படத்தை அவருடைய நண்பனுக்கு செல்ஃபோனில் அனுப்பி உடல் ரீதியாக  சித்ரவதை செய்ததாக அந்த பெண் எழுதியுள்ளார். கடந்த சனிக்கிழமையன்று நீதிமன்றத்தில் விவகாரத்தை பெற்ற அந்த பெண் தன்னுடைய மகளோடு தனியாக வசித்து வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவருடைய முன்னாள் கணவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் கூறியுள்ளனர்.