இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கு முதல் தொடரிலேயே கோப்பை வென்று கொடுத்தவர். மீண்டும் மும்பை அணிக்கு கேப்டனாகிவிட்டார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் விமர்சனங்கள் தான் கிடைத்தது. அதேபோல தற்போது உலகக்கோப்பை இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கயிருக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றொரு சவாலான விஷயத்தை எதிர் கொண்டுள்ளார் . அதாவது அவருடைய மனைவி நடாஷாவும் இவரும் விவாகரத்து பெற்றுவிட்டதாக என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.

நடாஷா செர்பியா நாட்டைச் சார்ந்தவர் என்பதால் அந்த நாட்டு விதிகளின்படி ஹர்திக் பாண்டியா தன்னுடைய சொத்தில் 70% மனைவிக்கு அளிக்க வேண்டும் என்றும் தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் விவகாரத்து குறித்து இருவரும் இதுவரை எந்த ஒரு விஷயமும் பேசவில்லை மௌனம் காத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியாவின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய சொத்தில் பாதியை அம்மாவின் பெயருக்கு எழுதி வைத்திருக்கிறேன். கார், வீடு எல்லாமே அம்மாவின் பெயரில் தான் இருக்கிறது .வருங்காலத்தில் நான் யாருக்கும் என்னுடைய சொத்தை பங்கு போட்டு கொடுக்க வேண்டாம் என்று பேசியிருக்கிறார்.