புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் புதூர் நகர் அருகே விஷவாயு தாக்கியதில் 15 வயது சிறுமியான செல்வராணி என்பவர் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடலானது பிரேத பரிசோதனைக்கு அடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் இறந்துபோன சிறுமி செல்வராணிக்கு மூக்குத்தி குத்த வேண்டும் என்ற ஆசையை  அவருடைய பாட்டி நிறைவேற்றியுள்ளார். சிறுமியின் உடலுக்கு அவர் கண் கலங்கியபடி தங்க மூக்குத்தி அணிவித்துள்ளார். இது காண்போர் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.