
நாடு முழுவதும் மலையாள திரையுலகில் உள்ள பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து கூறி வருகிறார்கள். இது தொடர்பாக நடிகர் விஷால் சமீபத்தில் கொடுத்த பேட்டியின் போது பெண்களுக்கு முதலில் தைரியம் வேண்டும். யாராவது தவறான நோக்கத்தோடு அணுகினால் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று கூறினார். இது குறித்து தற்போது நடிகை ராதிகா சரத்குமார் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருந்த ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக கூறினார்.
அவரிடம் ஏன் இத்தனை நாட்கள் கழித்து இந்த குற்றச்சாட்டுகளை கூறுகிறீர்கள். உங்களிடம் இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டனர். அதோடு அவருக்கு சினிமாவில் வாய்ப்புகளும் குறைந்துவிட்டது. அந்த திறமையான பாடகி வெளிப்படையாக பாலியல் புகார்கள் குறித்து கூறியதால் வாய்ப்புகளை இழந்து கஷ்டப்படுகிறார். திரைத்துறையில் யார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாலும் அவர்களை செருப்பால் அடிக்கலாம் என்று விஷால் கூறியது முறையான பதில் கிடையாது. இது ஒரு தலைவர் பேசக்கூடிய பேச்சுமல்ல. ஒரு youtube பர் நடிகைகள் குறித்து மிகவும் தவறான முறையில் பேசி இருப்பதை நான் பார்த்தேன்.
ஒருவேளை நடிகர் விஷாலுக்கு தைரியம் இருந்தால் அவரை முதலில் செருப்பால் அடிக்கட்டும். என்னை அழைத்தால் நானும் துடைப்புத்துடன் வருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் மலையாள சினிமாவில் கேரவனில் ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடைமாற்றும் வீடியோவை நடிகர்கள் உட்பட அமர்ந்து செல்போனில் பார்க்கிறார்கள். இதனை நான் என் கண்களால் நேரடியாக பார்த்துள்ளேன். அதனால்தான் எப்போதும் ஹோட்டலில் அறை எடுத்து உடை மாற்றுகிறேன். இதுகுறித்து சக நடிகைகளையும் நான் எச்சரித்துள்ளேன். அவர்களும் பலமுறை பாதுகாப்பு கருதி என் அறையை தட்டியுள்ளார்கள். அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.